தோனி, ரெய்னாவிற்கு கொடுத்த அங்கீகாரம்...ரசிகர்கள் எனக்கு இன்னும் கொடுக்கல - ஜடேஜா வேதனை

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings Suresh Raina
By Karthick Apr 09, 2024 05:57 AM GMT
Report

சென்னை அணி நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

சென்னை வெற்றி

2 தோல்விகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் பலமான கொல்கத்தா அணியை எதிர்கொண்டது சென்னை அணி. டாஸ் வென்ற பௌலிங் தேர்வு செய்த சென்னை அணி முதல் பந்துலேயே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

jadeja-sad-about-his-nickname-in-stadium-

அதிரடி ஆட்டக்காரர் சால்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 6 ஓவரில் பந்து வீச வந்த ஜடேஜா ஒரே ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்தார். நரேன், ரகுவன்ஷி இருவரும் அவுட்டாகினார். கட்டுக்கோப்பக பந்துவீசிய சென்னை அணி சீரான இடைவேளையில் விக்கெட் எடுத்து கொண்டே இருந்தது.

5 வருடமாக தோனி'யால் முடியாதது...5 போட்டியிலேயே செய்த ருதுராஜ் - குவியும் பாராட்டுக்கள்

5 வருடமாக தோனி'யால் முடியாதது...5 போட்டியிலேயே செய்த ருதுராஜ் - குவியும் பாராட்டுக்கள்

இதன் காரணமாக 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் ஜடேஜா தேஷ்பாண்டே இருவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

jadeja-sad-about-his-nickname-in-stadium-

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி இலக்கை 17.4 ஓவர்களில் எட்டியது.

அங்கீகாரம்

சென்னையில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 58 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நட்சத்திர ஆட்டக்காரர் ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

jadeja-sad-about-his-nickname-in-stadium-

அதன் பிறகு நெறியாளர் ஹர்ஷா போக்லே'வுடன் ஜடேஜா உரையாடினார். அப்போது ஹர்ஷா போக்லே தோனி, ரெய்னா இருவருக்குமே தல, சின்ன தல என்ற பட்டங்கள் உண்டு.

jadeja-sad-about-his-nickname-in-stadium-

அந்த வகையில் உங்களுக்கு 'கிரிக்கெட் தளபதி' என்று பட்டம் அளிக்கலாமா?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜடேஜா, அவர்கள் இருவரின் பட்டங்களும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், எனக்கு அப்படியில்லை. அதனால் யாரிடமாவது சொல்லி ரசிகர்களிடம் சம்மதம் வாங்க வைக்கிறேன். அவர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்.