5 வருடமாக தோனி'யால் முடியாதது...5 போட்டியிலேயே செய்த ருதுராஜ் - குவியும் பாராட்டுக்கள்

MS Dhoni Ruturaj Gaikwad Chennai Super Kings Kolkata Knight Riders IPL 2024
By Karthick Apr 09, 2024 02:11 AM GMT
Report

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை வெற்றி

2 தோல்விகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் பலமான கொல்கத்தா அணியை எதிர்கொண்டது சென்னை அணி. டாஸ் வென்ற பௌலிங் தேர்வு செய்த சென்னை அணி முதல் பந்துலேயே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

gaikwad-made-record-dhoni-cant-do-in-5-years

அதிரடி ஆட்டக்காரர் சால்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 6 ஓவரில் பந்து வீச வந்த ஜடேஜா ஒரே ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்தார். நரேன், ரகுவன்ஷி இருவரும் அவுட்டாகினார்.

gaikwad-made-record-dhoni-cant-do-in-5-years

கட்டுக்கோப்பக பந்துவீசிய சென்னை அணி சீரான இடைவேளையில் விக்கெட் எடுத்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் ஜடேஜா தேஷ்பாண்டே இருவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

gaikwad-made-record-dhoni-cant-do-in-5-years

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி இலக்கை 17.4 ஓவர்களில் எட்டியது. சென்னையில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 58 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

5 வருட சாதனை

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் நேற்று அரை சதம் அடித்ததன் மூலம், 5 வருடங்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி செய்திராத சாதனை ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார்.

gaikwad-made-record-dhoni-cant-do-in-5-years

அதாவது சென்னை அணிக்கு கேப்டனான தோனி கடைசியாக 2019-ஆம் ஆண்டு தான் அரை சதம் விளாசி இருந்தார். 5 வருடங்களாக தோனியால் செய்ய முடியாத அதனை நேற்று ருதுராஜ் செய்துள்ளார்.

gaikwad-made-record-dhoni-cant-do-in-5-years

நேற்று பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி, 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.      

You May Like This Video