தன்னை அவுட்டாக்கிய ஜடேஜாவை தட்டிக்கொடுத்த ரஹானே: குவியும் பாராட்டுகள்
ஜடேஜா எதிர்பாராமல் அவசரமாக றன் ஓடியதில் தனது விக்கெட்டை பறிகொடுத்த ரஹானே. ஜடேஜாவுக்கு ஆறுதல் கூறிய விதம் தற்போது வைரலாகி வருகிறது.
ரவீந்திர ஜடேஜாவால் ரன் அவுட் ஆனபோதும் அவர் மீது ஆத்திரத்தை வெளிபடுத்தாமல் ரஹானே தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தது சமூகவலைதளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
மெல்பேர்னில் முதல் இன்னிங்சை இந்திய அணி விளையாடியபோது, சிங்கில் தட்டிவிட்டு ரவீந்திர ஜடேஜா ஓடி வந்தார். இதைக்கண்டு மறுமுனையில் இருந்து ஓடி வந்த ரஹானே, கிரீசுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கையில் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
112 ரன்களில் ரன் அவுட் ஆனாலும் அதற்கு காரணமான ஜடேஜா மீது ஆத்திரபடாமல் அவரை தட்டிக் கொடுத்தபடி ரஹானே வெளியேறினார். இந்த காட்சியை கண்டு, அவரை டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் வெகுவாக பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil