ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா? கண்டிப்பாக இல்லை; 20 வயதாக களமிறங்கி சாதனை!

Jackie Chan
By Swetha Apr 13, 2024 06:40 AM GMT
Report

நடிகர் ஜாக்கி சானின் வயதான தோற்றததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு 20 வயது ஜாக்கியாக களமிறக்கியது படக்குழு.

வயசாகிருச்சா? 

சிறுவயதில் இருந்து நாம் பார்த்து ரசித்த ஆக சிறந்த நடிகர் தான் ஜாக்கி சான். இவர் மொழி கடந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த ஆக்‌ஷன் நாயகன் ஆகா வளம் வந்தவர். இவரது படங்களில் சண்டை மட்டும் போடாமல் சீரியஸான நேரத்திலும் நகைச்சுவையைச் சேர்த்து நடித்து ரசிக்க வைத்தவர்.

ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா? கண்டிப்பாக இல்லை; 20 வயதாக களமிறங்கி சாதனை! | Jackie Chans New Look Goes Viral In Internet

அப்படிபட்டவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மிகவும் வயதாகியதாக புகைப்படங்கள் வெளியானது. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் ‘ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா...?’ எனக் கண்ணீர் விடாத குறையாக புலம்பித் தள்ளினர்.

90's பிடித்த ஹீரோ ;அவருக்கு என்ன ஆச்சு? நொறுங்கிய ரசிகர்கள்- உண்மையை உடைத்த ஜாக்கிசான்!

90's பிடித்த ஹீரோ ;அவருக்கு என்ன ஆச்சு? நொறுங்கிய ரசிகர்கள்- உண்மையை உடைத்த ஜாக்கிசான்!

20 வயது ஜாக்கி

பிறகு இதற்கு பதிலளித்த அவர் அது படத்திற்காகப் போடப்பட்ட கெட்டப் என்றும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் படுத்தினார். இந்நிலையில், தனது 20 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ‘தி மித்’ என்ற படத்தில் ஜாக்கி நடித்துள்ளார்.

ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா? கண்டிப்பாக இல்லை; 20 வயதாக களமிறங்கி சாதனை! | Jackie Chans New Look Goes Viral In Internet

அதன் இரண்டாம் பாகம் ‘தி லெஜென்ட்’ என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. இதற்காகவே 20 வயது இளம் ஜாக்கியை களம் இறக்கி இருக்கிறார்கள். இது டூப்போ அல்லது டீ ஏஜிங் தொழில்நுட்பமோ கிடையாது என்பதுதான் இன்னொரு ஆச்சரியம். இதனை ஏஐ தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் படக்குழுவினர்.இது மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் எனவும் அவர்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளது.