எனது கரிசனம் சிக்னல் இல்லை.. அதிமுகவிற்கு அட்வைஸ் செய்கிறோம் - திருமாவளவன்!
தான் கரிசனமாக சொல்வது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “தமிழகத்தில் திமுக, அதிமுக என்கிற இரு துருவ அரசியல் 1977ஆம் ஆண்டு முதலில் இருந்து வருகிறது.
திமுகவாக அதிமுகவா என அரசியல் களம் நீடித்து வரும் சூழலில், அதனை மாற்றி அமைக்க வேண்டும் என பாஜக போன்ற கட்சிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தில் அமர,
திமுக - பாஜக என்ற போட்டி அரசியலை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் முனைப்பாக உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என விசிக கருதுகிறது. ஏனெனில் பாஜக தமிழ்நாட்டில் வலுப்பெற்றுவிட்டால்,
அட்வைஸ்..
எதிர்காலத்தில் சாதியவாத, மதவாத சக்திகள் இங்கே கொட்டமடிக்கும் சூழல் உண்டாகிவிடும். அதனை தடுக்க வேண்டும் என்றால் பாஜகவுக்கு அதிமுக இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து.
அதனால்தான் அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அட்வைஸ் செய்து வருகிறோம். மற்றபடி விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியில் உள்ள நிலையில், மாற்றுச் சிந்தனைக்கு இடமில்லை.
அதிமுகவுக்கு கரிசனமாக சொல்வதை மாற்றுக் கூட்டணிக்கான சிக்னல் என்று இங்கு புரிந்துகொள்ளப்படுகிறது. அது உண்மை அல்ல. வரும் தேர்தலில் அதிமுகவுடன்தான் பாஜக பயணிக்க விரும்பும். அதற்கான நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதையும் காண முடிகிறது” என்று தெரிவித்தார்.