சரியும் குழந்தைகள் பிறப்பு விகிதம்- மக்கள் தொகையில் வீழ்ச்சி? பகீர் ஆய்வறிக்கை வெளியீடு!

Italy Europe
By Swetha Mar 31, 2024 07:49 AM GMT
Report

இத்தாலியில் 2022-ம் ஆண்டைவிட 2023-ம் ஆண்டு குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிறப்பு விகிதம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கட்டுமையாக சரிந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில், கடந்த 2022-ஆம் ஆண்டு இத்தாலியில் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்துள்ளது.

சரியும் குழந்தைகள் பிறப்பு விகிதம்- மக்கள் தொகையில் வீழ்ச்சி? பகீர் ஆய்வறிக்கை வெளியீடு! | Italys Birth Rate Continues To Decline

ஆனால் 2023 ஆம் ஆண்டு இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. சென்ற ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன. அதைவிட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டு குறைவாக பிறந்துள்ளதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000; மத்திய அரசின் அசத்தல் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஆய்வறிக்கை

ஜனவரி மாதம் நிலவரப்படி அங்கு 5.80 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 7000 பேர் குறைவாக உள்ளது. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருபவர்களுடைய எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

சரியும் குழந்தைகள் பிறப்பு விகிதம்- மக்கள் தொகையில் வீழ்ச்சி? பகீர் ஆய்வறிக்கை வெளியீடு! | Italys Birth Rate Continues To Decline

எனவே, அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. இத்தாலியின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் 9 சதவீதம் இருக்கின்றனர், அதனால் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவியாக உள்ளது என தகவலில் தெரியவந்துள்ளது.