முதல் பெண் பிரதமராகிறார் மெலோனி!
இத்தாலி பிரதமராக வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியோர்ஜியா மெலோனி பதவி ஏற்க உள்ளார்.
பொருளாதார நிலை
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் தேர்தல்
அதன் அடிப்படையில், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. இந்நிலையில், 600 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், வெற்றி பெற்றுள்ளோம் என மெலோனி கூறியுள்ளார்.
மெலோனி
இதுகுறித்து மெலோனி கூறும்போது, எங்களுடன் நீண்ட நாட்களாக இல்லாத ஒவ்வொருவருக்கும் நான் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். நாளை முதல் எங்களுடைய மதிப்பை நாங்கள் காட்ட வேண்டும்.
இத்தாலியர்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கமாட்டோம். ஒருபோதும் நாங்கள் அப்படி செய்ததும் இல்லை என கூறியுள்ளார்.