52 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றி இத்தாலி அணி சாதனை!

italy wins euro football
By Anupriyamkumaresan Jul 12, 2021 03:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கால்பந்து
Report

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

52 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றி இத்தாலி அணி சாதனை! | Euro Football Italy Wins

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டியுள்ள இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இறுதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.

52 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றி இத்தாலி அணி சாதனை! | Euro Football Italy Wins

தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன.

52 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ கோப்பையை கைப்பற்றி இத்தாலி அணி சாதனை! | Euro Football Italy Wins

இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை 1968-ம் ஆண்டு வென்றுள்ளது.

களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.