10 வருட காதல்.. பாலியல் கருத்தால் வந்த பிரிவினை - பிரேக் அப் செய்த பிரதமர்!

Twitter Italy
By Vinothini Oct 20, 2023 10:49 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இத்தாலி பிரதமர் தனது 10 வருட காதலரை பிரேக் அப் செய்துள்ளார்.

காதல்

இத்தாலிய நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இவர் ஜியாம்ப்ருனோ என்பவர் திருமணம் செய்துகொள்ளாமல் 10 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து உறவில் இருந்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது நீண்டகால காதலர் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிந்ததாக அறிவித்தார், அவர் சமீபத்தில் தொலைக்காட்சியில் பாலியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டதால் ஜார்ஜியா இந்த முடிவை எடுத்தார்.

3ம் உலகப்போர் உறுதி?.. அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - என்ன காரணம்!

3ம் உலகப்போர் உறுதி?.. அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - என்ன காரணம்!

டுவீட்

இந்நிலையில், அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "கிட்டத்தட்ட 10 வருடங்கள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவுடனான எனது உறவு இங்கே முடிவடைகிறது. எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டன, அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாம் இருந்த தருணங்களைப் பாதுகாப்பேன், நமது நட்பைப் பாதுகாப்பேன், தன் தாயை நேசித்து, தந்தையை நேசிக்கும் ஏழு வயதுச் சிறுமியை எப்படியும் பாதுகாப்பேன். என்னிடம் எதுவும் இல்லை.

நீங்கள் நடனமாடச் சென்றால், குடிபோதையில் இருப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு - எந்த விதமான தவறான புரிதலும் எந்த வகையான பிரச்சனையும் இருக்கக்கூடாது - ஆனால் நீங்கள் குடித்துவிட்டு உங்கள் உணர்வை இழப்பதைத் தவிர்த்தால், நீங்கள் சில சிக்கல்களில் சிக்குவதையும் வருவதையும் தவிர்க்கலாம்" என்றும்.

இதன்பிறகு மெலோனி தனது பார்ட்னரின் கருத்துக்களுக்காக தன்னை மதிப்பிடக்கூடாது என்றும், எதிர்காலத்தில் அவரது நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.