ஜி-7 மாநாட்டில் மோடி..முதல் நாளே இப்படியா? நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கைகலப்பு!
இத்தாலியில் இன்று ஜி 7 மாநாடு நடைபெற இருந்தது.
ஜி-7 மாநாடு
நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் 290க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்று பெற்றது. இதை அடுத்து பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில், இத்தாலியில் ஜி 7 மாநாடு இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மோடி இத்தாலிக்கு தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக புறப்பட்டார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகள் பங்கேற்கின்றன. அங்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான், கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பிக்கள் கைகலப்பு
இப்படி உலக தலைவர்கள் குவிந்திருக்கும் நேரத்தில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஒருவர் ஒருவர் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது, இத்தாலி நாடாளுமன்றத்தில் சிறு மாகாணங்களுக்கு அதிக அளவில் சுயாட்சி அதிகாரம் அளிக்கும் மசோதாவை தற்போது ஆளும் வலதுசாரி அமைப்பு கொண்டு வந்தது. இதனை எதிர்க்கட்சியான பைவ் ஸ்டார் இயக்கம் எதிர்த்து வாக்குவாதம் செய்தது.
இதையடுத்து, அவையில் சற்று கடுமையான நிலவரம் ஏற்பட்ட தொடங்கியதும் பைவ் ஸ்டார் இயக்கத்தின் எம்பி ஒருவர் மாகாண விவகாரங்கள் துறை அமைச்சரான ராபர்டோ மீது இத்தாலி கொடியை வீசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுங்கட்சி எம்பிக்கள் அந்த எம்பியை பிடித்து தாக்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த எம்பிக்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துக் கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் ஒரு எம்பி கடுமையாக காயம் அடைந்தார்.