பாலியல் வழக்கு, 10 வினாடிக்குள் நடந்தால் அது குற்றமில்லை - நீதிபதி தீர்ப்பால் ஷாக்கான மக்கள்!

Italy Crime
By Vinothini Jul 17, 2023 10:29 AM GMT
Report

 இத்தாலியில் பாலியல் வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலியல் சீண்டல்

இத்தாலி, ரோம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த பள்ளியின் காப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமி படிக்கட்டில் செல்லும்பொழுது பின்னால் இருந்து அவரது பேண்ட்டை பிடித்து இழுத்துள்ளார். அதோடு பின் பகுதியில் தொட்டு உள்ளாடையை பிடித்ததாக புகாராக்கப்பட்டது.

italians-grope-themselves-after-judge-order

இதனை விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்டார், ஆனால் கேலிக்காக இழுத்ததாக கூறியுள்ளார்.

நீதிபதி தீர்ப்பு

இந்நிலையில், குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வழக்கறிஞர் வாதாடினார். விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட காப்பாளரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

italians-grope-themselves-after-judge-order

அதற்கு அவர் "அதாவது இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாகவே நடந்ததாம். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரமே நடந்ததால், குற்றத்திற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை" என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த மக்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.