ஒரு டாலர் விலைக்கு வீடு - ஆஃபரை அள்ளித் தெறிக்கும் இத்தாலி!
அமெரிக்கர்களுக்கு இத்தாலி கிராமம் ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது.
ஒல்லோலாய்
இத்தாலியில் பொருளாதார மந்த நிலையால் அங்குள்ள கிராமங்கள், சிறு நகரங்கள் காலியாகி வருகின்றன. இதனால், உரிமையாளர் இல்லாத வீடுகளை குறைந்த விலையில் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சர்டினியாவில் உள்ள ஒரு கிராம் ஒல்லோலாய் (Ollolai), அமெரிக்கர்களுக்கு ஆபரை அறிவித்துள்ளது. டிரம்ப் வெற்றியால் விரக்தியடைந்த அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது.
அதிரடி ஆஃபர்
எனவே, அத்தகைய அமெரிக்கர்கள் வந்தால் தங்கள் கிராமத்தில் ஒரு டாலர் அல்லது ஒரு யூரோவுக்கு வீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறையாக புதிதாக குடியேறும் வெளிநாட்டினர், வீட்டை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.
அதே ஊரில் வசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் 2,250 ஆக இருந்த மக்கள்தொகை, 1300 ஆக குறைந்துள்ளது. பலர் வேலை மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்.
இதன் மூலம் நகர சபைகளுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை சில ஆண்டுகளாகவே செயல்படுத்தி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.