புத்தகம் படித்ததால் சிக்கிய திருடன் - ஆசிரியர் அளித்த பரிசு
திருட வந்த இடத்தில் புத்தகம் படித்ததால் திருடன் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருட்டு
இத்தாலி, பிரதி மாவட்டத்தில் உள்ள வீட்டில் திருட பால்கனி வழியாக திருடன் உள்ளே நுழைந்துள்ளார். அங்கு படுக்கையின் அருகே உள்ள மேஜையில் கிரேக்க புராதன புத்தகமான இல்லியாட் என்ற புத்தகம் இருந்துள்ளது.
இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவர் வாசிப்பில் மூழ்கியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த உரிமையாளரை பார்த்த பின் உள்ளே நுழைந்த பால்கனி வழியாக தப்பி செல்ல முயன்றுள்ளார்.
புத்தகம் பரிசு
ஆனால் சிறுது நேரத்தில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தகவலறிந்த புத்தகத்தின் ஆசிரியர் அவருக்கு அந்த புத்தகத்தை பரிசளிக்க விரும்புவதாகவும், அப்போது தான் அவரால் புத்தகத்தை படித்து முடிக்க முடியும் என கூறியுள்ளார்.
அவரிடம் விலையுயர்ந்த ஆடைகள் அடங்கிய பையை கைப்பற்றிய காவல்துறையினர், அது அன்று மாலை வேறொரு வீட்டில் இருந்து திருடப்பட்டது என தெரிவித்துள்ளனர்.