'மெலோடி' மெலோனி சொன்ன வார்த்தை; சிரித்து மகிழ்ந்த பிரதமர் மோடி - செல்ஃபி Video!

Narendra Modi Viral Video India Italy World
By Jiyath Jun 15, 2024 08:30 AM GMT
Report

பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவை பிரதமர் மெலோனி வெளியிட்டுள்ளார்.

செல்ஃபி வீடியோ

இத்தாலி நாட்டின் அபுலியாவில் நடைபெற்ற 50-வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவருடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைத்தளங்களை வைரலானது.

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவை பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று மெலோனி கூற பின்னால் நிற்கும் பிரதமர் மோடி கையசைத்த படியே சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்கேயும் நிற்காது - உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்!

எங்கேயும் நிற்காது - உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்!

மெலோடி

முன்னதாக கடந்த ஆண்டு மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்ஃபி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் ஒன்று சேர்த்து 'மெலோடி' என்ற வார்த்தையை பிரதமர் ஜார்ஜியா மெலோனி பயன்படுத்தினார்.

அப்போதிலிருந்து தான் மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது. தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோவிலும் #மெலோடி என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.