நெருங்கும் மக்களவை தேர்தல் - அதிரடியாக புதிய அணியை அமைத்த பிரேமலதா..!

Vijayakanth Vijayakanth DMDK
By Karthick Mar 11, 2024 02:18 AM GMT
Report

மக்களவை தேர்தலில் இன்னும் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற இறுதி முடிவை தேமுதிக எடுத்திடவில்லை.

தேர்தல் கூட்டணி

இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்ற நிலையில், தேர்தல் பணிகளை நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

it-wing-was-created-at-dmdk-party

தமிழகத்தை பொறுத்தமட்டில், திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி உறுதியாகவில்லை.

உறுதியான கூட்டணி - ஆனால் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் கேட்கும் தேமுதிக? அதிமுக முடிவு என்ன..?

உறுதியான கூட்டணி - ஆனால் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் கேட்கும் தேமுதிக? அதிமுக முடிவு என்ன..?

தேமுதிக, தரப்பில் அதிமுகவுடன் 7 மக்களவை தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருக்கோவிலூர் தொகுதி போன்றவற்றை கோரிக்கையாக வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதிமுக 4 மக்களவை இடங்களை மட்டுமே அளிக்க சம்மதிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

புதிய அணி...

இந்த சூழலில் தான், தேமுதிகவின் ஐ.டி விங்கை அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

it-wing-was-created-at-dmdk-party

உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், டுவிட்டர், யூடூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.

தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது.

it-wing-was-created-at-dmdk-party

கீழ்கண்ட நிர்வாகிகள் இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சியடைய பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.