பூர்விகா உரிமையாளர் வீடு மற்றும் ஷோரூம்களில் தொடரும் ஐடி ரெய்டு - என்னென்ன சிக்கியது?

Chennai Income Tax Department
By Sumathi Oct 18, 2024 05:06 AM GMT
Report

பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது.

பூர்விகா

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பூர்விகா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் நடராஜன்.

poorvika

இந்த விற்பனை நிறுவனம் மூலம் செல்போன், டேப்லெட்கள் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

வருமான வரி சோதனை

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்று பூர்விகா உரிமையாளரின் வீடு, சென்னை பள்ளிக்கரணையில் இந்த நிறுவனம் தொடர்புடைய மற்றொரு இடம் என 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.

பூர்விகா உரிமையாளர் வீடு மற்றும் ஷோரூம்களில் தொடரும் ஐடி ரெய்டு - என்னென்ன சிக்கியது? | It Raids Poorvikas House And Showrooms Details

கடையில் ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை தவிர்த்து புதிதாக வெளியிலிருந்து வரும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தீவிர சோதனை முடிவடைந்த பின்னே ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.