தமிழகத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
By Thahir
தமிழ்நாட்டில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை, வேலூர், ஆம்பூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை ராமாபுரம், நுங்கப்பாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதுபோன்று, ஆம்பூரில் உள்ள ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.