அரசியல்வாதிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் - 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!
கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐடி ரெய்டு
பெரம்பூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பின்னி மில்லுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்திற்கு நிலம் வாங்குவது முதல் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெறுவது வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச குற்றச்சாட்டு
இதற்கிடையில், லேண்ட்மார்க் ஹவுசிங் ப்ராஜெக்ட் சென்னை பிரைவேட் லிமிடெட், கேஎல்பி ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்த 3 கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் வழங்கி நிலத்தை பெற்றதாக கட்டுமான நிறுவன இயக்குனர்கள் சுனில் கேட்பாலியா, மணீஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.