முன்னாள் சபாநாயகர் வீட்டில் ரெய்டு; கணக்கில் வராத பணம்?வருமான வரித்துறை அதிரடி!
திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலாளர் ஆவுடையப்பன் கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மக்களுக்கு பணம், பரிசு, போன்றவற்றைவழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு திடீரென வருமான வரித்துறை அதிகரிகள் நுழைந்தனர். அப்போது முன்னாள் சபாநாயகரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் வளாகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.
வரித்துறை அதிரடி
இதை தொடர்ந்து 9 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர், திமுக அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர்.இதனால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வெளியேறினர். இதை பற்றி தகவலறிந்த திமுகவினர் அங்கு திரண்டு, மத்தியஅரசுக்கு எதிராக கோஷமெழுப்பினர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
சுமார் இரவு 9 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை கணக்கில் வராத பணம் மற்றும்முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், அதிகாரிகள் எவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து பேசிய நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், அதிகாரிகள் வந்து அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். ஆனால், இங்கிருந்து அவர்கள் எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்று கூறினார்.