அதிகாலையில் பரபரப்பு - திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு!

Tamil nadu DMK Income Tax Department
By Jiyath Oct 05, 2023 02:55 AM GMT
Report

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

எம்.பி ஜெகத்ரட்சகன்

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

அதிகாலையில் பரபரப்பு - திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு! | Dmk Mp Jagadratsaka S House Office It Raid

தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் உள்ள பல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருமான வரித்துறை சோதனை

மேலும் ஆவடி அருகே, பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.