வரலாறு காணாத வீழ்ச்சி.. மோசமான நிலையில் ஐடி நிறுவனங்கள் - என்ன காரணம்?

HCL Infosys TATA Wipro
By Vinothini Oct 24, 2023 08:00 AM GMT
Report

ஐடி நிறுவனங்கள் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலாண்டு முடிவுகள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் பெரும்பாலாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது வர்த்தகம், ஊழியர்கள் எண்ணிக்கை, வருமானம் ஆகியவற்றில் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

it-industry-posts-slowest-growth-ever

நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் 2024 ஆம் நிதியாண்டில் 1- 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கூறப்பட்டு உள்ளது, தனது வரலாற்றில் மிகவும் குறைவான வளர்ச்சி அளவீடுகள் என பிஎன்பி பரிபாஸ் தரவுகள் கூறுகிறது.

Google Pay மூலம் புதிய கடன் வசதி அறிமுகம்.. எவ்வளவு தொகை பெறமுடியும் தெரியுமா?

Google Pay மூலம் புதிய கடன் வசதி அறிமுகம்.. எவ்வளவு தொகை பெறமுடியும் தெரியுமா?

ஐடி நிறுவனங்கள்

இந்நிலையில், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் பணவீக்க பாதிப்புகள் காரணமாக செலவுகளை குறைக்கும் விதிமாக டெக் சேவைகளுக்காக செலவிடுவதை குறைத்துள்ளனர். இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பலர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட, சேவை அளிக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு கூட தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

it-industry-posts-slowest-growth-ever

இந்திய ஐடி சேவை துறையின் இந்த மந்தமான வளர்ச்சி அளவீடுகளுக்கான முழுகாரணம் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை தான். ஜூன் மாதம் முடிவில் இந்திய ஐடி துறை டிசம்பர் காலாண்டில் வர்த்த்கம், வேலைவாய்ப்பு, லாபம் ஆகிய அனைத்திலும் சரிவில் இருந்து மீண்டு வரும் என கணிக்கப்பட்டது.

ஆனால் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் மூலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.