IT பெண் ஊழியர் ஓட ஓட வெட்டிக்கொலை..அலுவலக வளாகத்தில் நடந்த பயங்கரம் -மிரளவைக்கும் பின்னணி!
ஐடி பெண் ஊழியர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் 28 வயதான சுபதா சங்கர் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்திற்கு சுபதா சங்கர் வந்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவம் நடந்த அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.
மேலும் பலத்த காயம் அடைந்த சுபதா சங்கர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்து அங்குக் கூடியிருந்த இளைஞர்கள் சிலர் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐடி பெண் ஊழியர்
உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைக் கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுபதாவுடன் பணியாற்றிய கிருஷ்ண சத்யநாராயணன் என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து சுபதா பணம் வாங்கியுள்ளார்.
இதன் காரணமாக கொடுங்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண சத்யநாராயணன் அலுவலகத்திற்கு உள்ளேயே தாக்குதல் நடத்தியதாகப் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.