மனைவியைக் கொலை செய்த கணவன்.. Online video பார்த்து உடலை துண்டுகளாக வெட்டிய கொடூரம்- பகீர் பின்னணி!
ஆன்லைன் வீடியோவை பார்த்து மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி
டெல்லி ஜானக்புரில் வசித்து வருபவர்கள் தன்ராஜ் - தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். தன்ராஜ் வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில், தீபிகா ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தீபிகா ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இதனால் தன்ராஜுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அறிந்த தன்ராஜ் மனைவியைக் கண்டித்துள்ளார். இந்த சூழலில் தீபிகா தங்கி இருந்த வாடகை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக தீபிகாவிற்கு போன் செய்த போது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கட்டில் அடியிலிருந்த பாக்ஸில் வாயில் வெள்ளை டேப் ஒட்டப்பட்டு தீபிகா உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆன்லைன் வீடியோ
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தீபிகாவைக் சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளார். அப்போது உடலை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அதற்குத் தனது நண்பர் ஒருவரை அழைத்துள்ளார்.அதற்கு அவர் வர மறுத்த காரணத்தால் உடலைத் துண்டு துண்டாக வெட்டும் முடிவைக் கைவிட்டுள்ளார். கொலை செய்யவும் உடலை துண்டு துண்டாக வெட்டவும் ஏராளமான வீடியோக்களை பார்த்துள்ளார்.
தீபிகாவைக் கொலை செய்த பின்னர் அங்கிருந்து அமிர்த சரஸ் சென்று தனது மனைவியின் நண்பரையும் கொலை செய்யத் திட்டமிட்டதாக தன்ராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.