தங்கலான், கங்குவா படங்கள் வெளியாவதில் சிக்கல் - நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

Tamil nadu Chennai Madras High Court
By Swetha Aug 12, 2024 01:00 PM GMT
Report

தங்கலான், கங்குவா படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படங்களுக்கு சிக்கல் 

சென்னையை சேர்ந்த அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சீ ஃபுட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்னும் நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதோடு பல விஐபிக்கள் இவரிடம் தங்களது பணத்தை கொடுத்து வைத்திருந்தனர். . அந்த பணத்தை பலருக்கும் கடனாக கொடுத்து தொழில் புரிந்துள்ளார்.

தங்கலான், கங்குவா படங்கள் வெளியாவதில் சிக்கல் - நீதிமன்றம் போட்ட கண்டிஷன்! | Issue In Thangalan And Ganguva Movie Release

ஆனால் தொழிலில் ஏற்பட்ட நிதி இழப்பு காரணமாக திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமடைந்ததும் அவருடைய சொத்துக்களை சென்னை உயர்நிதிமன்றம் கைப்பற்றியது. இதற்காக நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் அவரிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து அந்தத் தொகையை வசூலித்து வருகிறார்.

அந்தவகையில் ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரும் அவரிடம் கடன் பெற்றுள்ளனர். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு பெற்ற ரூ. 10 கோடியே 35 லட்சத்தை வட்டியுடன்வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீங்கதான் அம்பானி பேமிலி ஆச்சே..! சம்பள பாக்கிய கொடுங்க - கொந்தளித்த சமுத்திரக்கனி!!

நீங்கதான் அம்பானி பேமிலி ஆச்சே..! சம்பள பாக்கிய கொடுங்க - கொந்தளித்த சமுத்திரக்கனி!!

நீதிமன்றம் 

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் இருவரும் இதுவரை பணத்தை திரும்பத்தரவில்லை. இதையடுத்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக்கோரியும், 18 சதவீத வட்டியுடன் ரூ. 26.34 கோடியை தர வேண்டும் எனவும் சொத்தாட்சியர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தங்கலான், கங்குவா படங்கள் வெளியாவதில் சிக்கல் - நீதிமன்றம் போட்ட கண்டிஷன்! | Issue In Thangalan And Ganguva Movie Release

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் அமர்வு அதிரடி உத்தரவுகளை பிறபித்துள்ளது. அதில் இடைக்கால உத்தரவாக ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதேபோல் அந்நிறுவனம் வெளியிட இருக்கும் அடுத்த படமான சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை வெளியிடும் முன்னரும் ரூ.1 கோடியை டெபாசிட் செய்து, படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.