நீங்கதான் அம்பானி பேமிலி ஆச்சே..! சம்பள பாக்கிய கொடுங்க - கொந்தளித்த சமுத்திரக்கனி!!

Karthi Samuthirakani Ameer Sultan
By Karthick Nov 30, 2023 08:48 AM GMT
Report

அமீர் - ஞானவேல் ராஜா விவகாரம் திரைஉலகில் பெரும் பரபப்புகளை அடுத்தடுத்து ஏற்படுத்தி வருகின்றது.

அமீர் - ஞானவேல் ராஜா

இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரம் தற்போது பலரும் அதிருப்தியை கொடுத்துள்ளது. கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் படம் வெளியான போது, எழுந்த பிரச்சினை தற்போது மீண்டும் 16 ஆண்டுகள் கழித்து வெடித்துள்ளது.

samuthirakani-slams-gnanavel-raja-in-paruthiveeran

அமீரை ஞானவேல் ராஜா ‘திருடன்’ என சொன்னது தான் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. இதற்கு இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, நடிகர் பொன்வண்ணன், கவிஞர் சினேகன் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்துள்னர்.

மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜா

இந்நிலையில், தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இத்துடன் இந்த விவகாரம் முடிவடையும் என்றும் தான் பலரும் நம்பினார்கள். ஆனால், விவகாரம் அத்துடன் நின்று விடவில்லை.

samuthirakani-slams-gnanavel-raja-in-paruthiveeran

தொடர்ந்து திரை துறை பிரபலங்கள் பலரும் ஞானவேல் ராஜாவை விமர்சித்தே வருகின்றார். இந்த நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி, ஞானவேல் ராஜாவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்றும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சமுத்திரக்கனி அறிக்கை

அதில், “பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது. எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சிங்களோ... அதே பொது வெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு... அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான். "அம்பானி பேமிலியாச்சே..!" காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..!” என சமுத்திரக்கனி குறிப்பிட்டுள்ளார்.