Gaganyaan: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான்!
ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
ககன்யான் திட்டம்
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை இந்தியாவும் எட்ட கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு 'ககன்யான்' என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் மாதிரி விண்கலம், TV- D1 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
வெற்றியடைந்தது
ஆனால் வானிலை காரணமாக விளக்கலாம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ அறிவித்தது. இதனையடுத்து, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டம் இன்று நடக்க முடியவில்லை.
இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று காலை 8;45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்நிலையில் கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வெற்றிகரமாக கடல் பரப்பில் இறங்கியது. இந்த வெற்றியின் காரணமாக 2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்தும் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பபடுவார்கள் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.