அந்த ஃபில்டர் காபியும், மசாலா தோசையும் தான்.. உற்சாகமாக்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாரஸ்ய தகவல்!
பில்டர் காபியும், மசாலா தோசையும் உற்சாகத்துடன் பணியாற்ற துணை புரிந்ததாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள்
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் ஆக.,23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது.
இந்த வெற்றிக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து, பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து, பல தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், இறுதிக்கட்ட கடினமான பணியை எதிர்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாலை 5 மணிக்கு அளிக்கப்பட்ட பில்டர் காபியும், மசாலா தோசையும் தொடர் உற்சாகத்துடன் பணியாற்ற துணை புரிந்ததாக பத்திரிகையாளர் பர்கா தத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி வழங்கி இதை முறியடித்தோம். திடீரென அனைவரும் நீண்ட நேரம் இருப்பதற்கு மகிழ்ச்சியடைந்தனர்' என இஸ்ரோ விஞ்ஞானிகளுள் ஒருவரான வெங்கடேஸ்வரா சர்மா தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.