பிரியாணினு எழுதினாலே பிடிக்கும்பா..நிமிசத்துக்கு இத்தனையா - லிஸ்டில் அடுத்து?
2022இல் அதிகம் ஆர்டர் போட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு தான் முதலிடம்.
பிரியாணி
ஸ்விகி நிறுவனம், ஆண்டின் டிரெண்ட் ரிபோர்டை (முன்பு, statEATstics) வெளியிடும். இதன்மூலம், ஓர் ஆண்டில், வாடிக்கையாளர்களின் எதனை அதிகம் ஆர்டர் செய்து உண்கிறார்கள் என்பதை அறியலாம். அதன்படி, 2022ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி உள்ளது.
அதாவது, ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் சிக்கன் பிரியாணி உள்ளது.
Top 10
சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன். இத்தாலிய பாஸ்தா, பீஸ்ஸா, மெக்சிகன் பவுள், காரமான ரமேன் மற்றும் சுஷி
Snacks
சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, ஃபிரஞ்சு ஃபிரைஸ், பூண்டு பிரட்ஸ்டிக்ஸ, Hot wings, டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி, மிங்கிள்ஸ் பக்கெட்
Sweets
குலாப் ஜாமூன், ரஸமலாய், சாக்கோ லாவா கேக், ரஸகுல்லா, சாக்கோ சிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, இளந்தேங்காய் ஐஸ்கிரீம், Death by Chocolate, ஹாட் சாக்லேட் ஃபட்ஜ்
மேலும், ஸ்விகி இன்ஸ்டாஸ்மார்ட் தேடலில், பெட்ரோல், அம்மா, சோஃபா, மெத்தைகள், உள்ளாடைகள் போன்றவற்றை அதிகமாக தேடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.