சுவையான பிரியாணி செய்ய சில டிப்ஸ்... ட்ரை பண்ணி பாருங்க...

By Petchi Avudaiappan May 02, 2022 09:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உணவு
Report

என்னதான் பண்டிகை நாட்கள்ல நாம ஸ்பெஷலா உணவுகள் செஞ்சாலும் வருடம் முழுவதும் சலிக்காமல் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு என்றால் அது பிரியாணி தான். விதவிதமாக பிரியாணிகள் இருந்தாலும் நம் வீட்டில் செய்யப்படும் பிரியாணிக்கு உண்மையிலேயே தனி சுவை தான். சில சமயங்களில் அவை சொதப்பவும் வாய்ப்புண்டு. அவர்களுக்காகவே இதோ சுவையான பிரியாணி செய்ய சில டிப்ஸ்...

  • பாசுமதி அரிசி, சீரகச் சம்பா என எந்த அரிசியில் பிரியாணி செய்தாலும் அரிசியை கையால் பிசைந்து கழுவாமல் விரலால் அலச வேண்டும். இல்லாவிட்டால் அரிசி உடைந்து விடும். தொடர்ந்து இரண்டு முறை தண்ணீர் மாற்றி கழுவி 15 நிமிடம் அரிசியை ஊற வைக்க வேண்டும்.
  • கழுவுவதற்கு முன் நெய்யில் அரிசியை வறுத்தெடுத்துச் சேர்த்தால் பிரியாணி உதிரியாக இருக்கும். அதேசமயம் பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது அரிசியை ஊற வைத்தால் போதுமானது. அதிக நேரம் ஊறினால் பிரியாணி குழைந்து போக வாய்ப்புள்ளது. 
  • பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்த்தால் தனிச்சுவையே. இதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • சிக்கன் என்றால் நீர் சேர்க்காமல் வேகவிட வேண்டும்.  மட்டன் என்றால் வேக வைத்த தனியே எடுத்து வைத்து கடைசியில் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். 
  • எந்த பிரியாணியாக இருந்தாலும்  கறியில் உள்ள கொழுப்பை பார்த்து அதற்கேற்ப எண்ணெய் சேர்க்க வேண்டும். அதிகமான எண்ணெய், நெய் பிரியாணி திகட்ட காரணமாகி விடும். 
  • அதேபோல் எலும்போடு இருப்பது தான் பிரியாணிக்கு அதிக சுவையை கொடுக்கும். எந்த கறியா இருந்தாலும் பிரியாணி செய்யும் முன் அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அப்போது தான் பிரியாணியோடு சேர்ந்த கறியும்  ருசியா இருக்கும். 
  • கறி மிருதுவாக இருக்க தயிர், உப்பு, சர்க்கரை சேர்த்து ஊற வைக்கலாம்.

இதையெல்லாம் ட்ரை பண்ணி சூப்பரான பிரியாணி செஞ்சி அசத்துங்க...!