ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!

India Indian Space Research Organisation ISRO Aditya-L1
By Jiyath Dec 03, 2023 04:19 AM GMT
Report

ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆதித்யா எல்-1

சூரியனை ஆய்வு செய்ய 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO). இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி 1ஐ சென்றடையும்.

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்! | Isro Important Information About The Aditya L 1

பின்னர் அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். மேலும், வரும் ஜனவரி 7ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலை நிறுத்தப்படும் என சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விண்கலம் குறித்த தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

இஸ்ரோ தகவல் 

அதில் "ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.

ISRO: ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன ஆனது..? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்! | Isro Important Information About The Aditya L 1

ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.