இலங்கையில் நடக்க உள்ள தாக்குதல்; உடனே வெளியேறவும் - இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை
இலங்கையில் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.
தாக்குதல் அபாயம்
இலங்கையின் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக இன்று(23.10.2024) காலை அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் மறு அறிவிப்பு வரும் வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அங்கு வசிக்கும் அமெரிக்க மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் எச்சரிக்கை
அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, பிரிட்டன், ரஷ்யா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் உடனே அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு
மேலும், இலங்கையில் பொதுஇடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம். ஹீப்ரு பேசுவது, ஹீப்ரு எழுதுவது, மதம், நாட்டை குறிப்பிடுவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையால் அருகம் வளைகுடா பகுதியில் 500க்கு மேற்பட்ட காவலர்களை குவித்து இலங்கை காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.