விபத்தில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலை - மீண்டும் கழுத்தில் பொருத்தி டாக்டர்கள் சாதனை!

Israel
By Sumathi Jul 15, 2023 06:05 AM GMT
Report

துண்டான சிறுவனின் தலையை மருத்துவர்கள் மீண்டும் பொருத்திய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

கார் விபத்து

சுலைமான் ஹாசன்(12) என்ற சிறுவன் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதில், அவருக்கு முதுகுத்தண்டின் முதுகெலும்பிலிருந்து மண்டை ஓடு பிரிந்தது. தொடர்ந்து, சிறுவன் விமானத்தில் ஹடாசா மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

விபத்தில் துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலை - மீண்டும் கழுத்தில் பொருத்தி டாக்டர்கள் சாதனை! | Israeli Doctors Reattached Boy Head After Accident

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலும் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சிறுவனை காப்பாற்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

மருத்துவர்கள் சாதனை

மேலும், சிறுவன் உயிர் பிழைக்க 50% வாய்ப்பு மடூமே இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அது வெற்றிகரமாக முடிவடைந்தது. அதனையடுத்து, சிறுவனுக்கு நரம்பியல் குறைபாடுகள் இல்லை என்பதும், அவர் சாதாரணமாக செயல்படுவதும்,

இவ்வளவு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உதவியின்றி நடப்பதும் சிறிய விஷயம் அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது ஒரே மகனை காப்பாற்றியதற்கு மருத்துவர்களுக்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.