இது மட்டும் நடந்தால்..இஸ்ரேல் நிச்சயம் அழிந்துவிடும் - டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!

Donald Trump United States of America Israel Election
By Swetha Sep 21, 2024 10:00 AM GMT
Report

இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும் என டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகியதை அடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிட்டு உள்ளார்.

இது மட்டும் நடந்தால்..இஸ்ரேல் நிச்சயம் அழிந்துவிடும் - டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை! | Israel Will Be Wiped Off From The Earth Says Trump

அவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதை தொடர்ந்து, இருவருக்கும் இடையேயான நேரடி விவாதங்கள் நடந்த நிலையில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் வலுவாகியுள்ளது.

மீண்டும் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?

மீண்டும் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?

எச்சரிக்கை

இந்த நிலையில் அமெரிக்க தேர்தலில் 40 சதவீதம் ஜீவர்கள் வாக்குகள் உள்ளன என்றும் அவர்களது வாக்குகள் மட்டும் எனக்கு போதாது என்றும் கூடுதல் வாக்குகள் வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் நடந்தால்..இஸ்ரேல் நிச்சயம் அழிந்துவிடும் - டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை! | Israel Will Be Wiped Off From The Earth Says Trump

மேலும் நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்தை பயன்படுத்தி

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவார்கள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். டெல் அவிவ், ஜெரசேலம் ஆகிய பகுதிகள் போர் மண்டலங்களாக மாறும் என்றெல்லாம் பேசியுள்ளார்.