இஸ்ரேல் போர்: 7 மணி நேரம் சடலங்களுக்கு அடியில் மறைந்து தப்பிய பெண் - அதிர்ச்சி Video!
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் சடலங்களுக்கு அடியில் மறைந்து உயிர் தப்பிய பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலபேர் உயிரிழந்தனர்.
தற்போது இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
உயிர் தப்பிய பெண்
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சிக்கி நிகழ்ச்சியில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல் நடக்கும்போது 'லீ சசி' என்ற பெண் மற்றும் 35 பேர் வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் ஓடிச் சென்று பதுங்கியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்களை சுட்டு தள்ளியுள்ளார். இதில் சசி என்ற அந்த பெண் மற்றும் 10 பேர் பாதுகாப்பாக உயிரிழந்த உடல்களின் அடியில் 7 மணிநேரம் மறைந்திருந்து உயிர் தப்பியுள்ளார்.
இதனை சசி வீடியோவாக படம்பிடுத்து தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். அதனை நண்பர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பலர் உயிரிழந்த நிலையில் கிடக்கக் கூடிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.