இஸ்ரேல் போர்: சர்ச்சை கருத்துகளை பதிவிட்ட 'மியா கலீஃபா' - விளாசும் நெட்டிசன்கள்!
இஸ்ரேல் போர் தொடர்பாக ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா பதிவிட்ட சர்ச்சையான கருத்துகளுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதல்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஏராளமான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். பல பெண்களை இருசக்கர வாகனங்கள், கார்களில் வைத்து கடத்தினார்கள். மேலும், வீடு வீடாகச் சென்று பலபேரை கொன்று குவித்தனர். இப்படியாக தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பிரபல ஆபாசப்பட நடிகையான 'மியா கலீஃபா' தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை கருத்து
அந்த பதிவில் ""பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும் நீங்கள் பாலஸ்தீன ஆதரவாக இருக்கவில்லை என்றால் நீங்கள் இந்த விவகாரத்தில் தவறான இடத்தில் நிற்கிறார்கள் என்று அர்த்தம்.வரலாறு உங்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தரும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல மற்றொரு பதிவில் ""பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் யாராவது அவர்கள் படும் துயரத்தை செல்போனில் கிடைமட்டமாக படம்பிடிக்கச் சொல்ல முடியுமா? எனப் பதிவிட்டிருந்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்க்கள் என்று மியா கலீஃபா அழைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மியா கலீஃபாவின் இந்த சர்ச்சை கருத்துகளால் அமெரிக்காவின் பிரபல அடல்ட் மேகசினான 'ப்ளே பாய்' நிறுவனம், ஹமாஸின் தாக்குதல்களைக் கொண்டாடும் அருவருப்பான மற்றும் கண்டிக்கத்தக்கக் கருத்துக்களைக் கூறியதால் மியா கலீஃபாவுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பிளேபாய் தளங்களிலிருந்து மியா கலீஃபா குறித்து அனைத்து கண்டென்டுகளையும் நீக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.