திசையெங்கும் மரண ஓலம்; 50 ஆயிரத்தை தாண்டிய பலி - தத்தளிக்கும் பொதுமக்கள்!
இஸ்ரேல்-காசா போரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல்-காசா
கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிலவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் அதனைத் தொடர்ந்து காசாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 100 பேருக்கு மேலாக உயிரிழந்தனர். தற்போது தெற்கு காசாவில் கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது.
தாக்குதலில் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முழுவதும் கடுமையான சேதங்களும், தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
50 ஆயிரம் பேர் பலி
எனவே உடனடியாக நோயாளிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் பலி எண்ணிக்கை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பொதுமக்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டும் என்று காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.