இஸ்ரேல் குறித்து பதிவிட்ட பிரபல நடிகை.. பதிலடி கொடுத்த அதிபர்!

Hollywood Actress Israel-Hamas War
By Vinothini Nov 07, 2023 12:01 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

இஸ்ரேல் போர் குறித்து நடிகை கூற்றுக்கு அதிபர் பதிலளித்துள்ளார்.

போர்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. பல நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கேட்பதாக இல்லை, தொடர்ந்து முப்படை தாக்குதலை காசா மீது நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போர் குறித்து ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில், இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

israel-president-slams-angelina-for-her-comments

அதில், அகதிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் பற்றி குறிப்பிட்ட அவர், தனது கவனம் முழுவதும், வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் மீது இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலில் நடந்தது ஒரு பயங்கரவாத செயல், வான்வழி தாக்குதல்களின் விளைவாக காசா வேகமாக வெகுஜன புதைகுழியாக மாறி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அதிபர் பதில்

இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் நடிகை ஏஞ்சலினா ஜோலியை கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், "ஏஞ்சலினா ஜோலியின் கூற்றுக்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். களத்தில் உள்ள உண்மை நிலவரங்களை பார்வையிடவும் பார்க்கவும் அவர் ஒருபோதும் காசாவில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்.

israel-president-slams-angelina-for-her-comments

காசாவில் இப்போது போர் நடக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு மனிதாபிமான நெருக்கடி எதுவும் இல்லை. காசா சிறைச்சாலையாக மாறியது இஸ்ரேலால் அல்ல.

இப்போது பயங்கரவாதத்தால் நிரம்பிய ஈரானியத் தளமாக காசா உள்ளது. ஒருவேளை இந்தப் போரின் விளைவாக, காசா மக்கள் கவுரவமான வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியான வேறு ஆட்சி அமையலாம். அது அமைதியை நோக்கி நகர்வதற்கும் உதவும்" என்று கூறியுள்ளார்.