நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திப்பீர்கள் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
இஸ்ரேல் பிரதமர் ஹிஸ்புல்லா அமைப்பை கடுமையாக எச்சரித்துள்ளார்.
போர்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்தனர், மேலும், சிலரை பிணை கைதியாக வைத்துள்ளனர். இவர்களது தாக்குதலால் இஸ்ரேல் எதிர்தாக்குதலை நடத்தியது, இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெற்று வந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் பல நாடுகள் தற்பொழுது இஸ்ரேல் பக்கம் நிற்கிறது.
எச்சரிக்கை
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும்" என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதக் குழுவால் தகர்க்கபப்ட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரும்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு காசா எல்லைப்பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.