இஸ்ரேல் பிரதமர் திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சி!
இஸ்ரேல் நாட்டில் பிரதமர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர்
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பிரதமராக உள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு. இவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர் வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.
அங்கு கோடை கால வெப்ப அலை அதிகமாக இருந்துள்ளது, இதனால் இவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அவர் அலுவலகத்தில் இருந்தபொழுது மயங்கி விழுந்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் உடல்நிலை
இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும் அவர் ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.