சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல், தொடரும் உள்நாட்டு போர் - மக்கள் பதற்றம்!
சிரியாவின் தலைநகர் மீது குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு சூழல் நிலவியது.
போர்
கடந்த 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது. அப்போது அதன் சிரியாவின் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது.
தொடர்ந்து, இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர், பலர் வீடுகளையும், குடும்பங்களையும் இழந்து பசி பட்டினியால் இருந்தனர். தற்போது சிரியா தலைநகரான டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்
இதனை தொடர்ந்து, சிரியா தலைநகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
மேலும், கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். பின்னர், இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.