எந்தவொரு குடிமகனும் கொல்லப்படுவதை ஜோர்டான் கண்டிக்கிறது - ராணி 'ரானியா அல் அப்துல்லா'!

Israel Jordan World Israel-Hamas War
By Jiyath Oct 26, 2023 07:19 AM GMT
Report

பாலஸ்தீனியரோ, இஸ்ரேலியரோ எந்தவொரு குடிமகனும் கொல்லப்படுவதை ஜோர்டான் கண்டிக்கிறது என்று அந்நாட்டு ராணி 'ரானியா அல் அப்துல்லா' தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.

எந்தவொரு குடிமகனும் கொல்லப்படுவதை ஜோர்டான் கண்டிக்கிறது - ராணி

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது. இதில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இத்தனை உயிர்களை பலிகொண்ட போரானது இன்னும் முடிவடையாமல் 3வது வாரமாக தொடர்கிறது. இந்த போரில் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேல் பக்கமே நிற்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா "அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடந்தபோது, உலக நாடுகள் பலவும் சந்தேகத்துக்கு இடமின்றி இஸ்ரேல் பக்கம் நின்றன. அதோடு, தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தாக்குதலைக் கண்டித்தன. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக உலக நாடுகள் அமைதியாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பிரபல இஸ்ரேலிய நடிகை அதிரடி கைது - என்ன காரணம்?

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பிரபல இஸ்ரேலிய நடிகை அதிரடி கைது - என்ன காரணம்?

ஜோர்டான் ராணி கேள்வி

உலக நாடுகள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்துவதையோ அல்லது உயிரிழப்புகளை ஒப்புக்கொள்வதையோ நிறுத்திவிட்டன. ஆனால், `இஸ்ரேலுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கிறோம்' எனச் சொல்வதை மட்டும் நிறுத்தவில்லை.

எந்தவொரு குடிமகனும் கொல்லப்படுவதை ஜோர்டான் கண்டிக்கிறது - ராணி

துப்பாக்கிமுனையில் ஒரு குடும்பத்தைக் கொல்வது தவறு என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் ஷெல் தாக்குதலால் கொல்வது மட்டும் சரியா..? அப்படியானால் இங்கு தெளிவான இரட்டை வேடம் இருக்கிறது. இது அரபு நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுவரை ஆறாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், 2,400 பேர் சிறுவர்கள். இது எப்படித் தற்காப்பு ஆகும். மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் பேச்சு சுதந்திரம் பாலஸ்தீனத்துக்கு மட்டும் நீட்டிக்கப்படவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடும்போது, ஒன்றாகக் கூடுவதற்கான உரிமையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், பாலஸ்தீனத்துக்காக ஒன்று கூடும்போது, அவர்கள் பயங்கரவாத ஆதரவாளர்களாகவும் அல்லது யூத விரோதிகளாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். பாலஸ்தீனியரோ, இஸ்ரேலியரோ எந்தவொரு குடிமகனும் கொல்லப்படுவதை ஜோர்டான் கண்டிக்கிறது. இஸ்ரேல் உட்பட ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமை போர் மூலம் அல்ல. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர சுதந்திரமான பாலஸ்தீனிய அரசு ஒன்றுதான் தீர்வு. அதுவும் பேச்சுவார்த்தையின் மூலமே. போர் அதற்குத் தீர்வல்ல. போர்கள் ஒருபோதும் வெல்லப்படுவதில்லை. வெற்றி என்பது, பெரும் உயிரிழப்பை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் உருவாக்கும் ஒரு கட்டுக்கதை. எனவே, அரசியல் தீர்மானம் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.