இஸ்ரேல் போர்: பதுங்கு குழியில் குழந்தைகளோடு 3 நாட்கள் - சென்னை தம்பதியினரின் அனுபவங்கள்!
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சிக்கி நாடு திரும்பிய சென்னை தம்பதியினர் தங்களின் மோசமான அனுபங்களை குறித்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலபேர் உயிரிழந்தனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தில் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் இஸ்ரேலின் ரேகோவாட். அந்த நகரத்தில் வசித்து வந்த சென்னை தம்பதியினர் குணசேகரன் தரன், அவரது மனைவி சாந்திதேவி மற்றும் குழந்தைகள் இந்தியா திரும்பியுள்ளனர்.
சென்னை தம்பதியினர்
அங்கு நடந்த தாக்குதலிலிருந்து அந்த தம்பதியினர் தப்பியது குறித்த தங்களின் வேதனையை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மனைவி சாந்திதேவி கூறுகையில் "ஏவுகணை வருவதை உணர்த்தும் ஒவ்வொரு சைரனுக்கு நடுவில் 10 நிமிடங்கள் இடைவெளி விடுவார்கள்.
அப்போது மேலே போய் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் ஷெல்டரில் அமர்ந்திருப்போம். பிரட் தான் உணவாக கிடைக்கும்” என கூறினார். இதுகுறித்து குணசேகரன் கூறுகையில் "தாக்குதல் தொடங்கிய நாள், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மோசமான நாள்.
இதுபோன்ற தாக்குதலை ஒன்றிரண்டு முறை இதற்கு முன் பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை மிக அதிகமாக இருந்தது. குழந்தைகளை வைத்துக் கொண்டு என்னால் அங்கிருக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.