மரண ஓலம்.. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் - நொடிக்கு நொடி உயரும் பலி!
பெய்ட் லாஹியா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தினர்.
இஸ்ரேல் ராணுவம்
வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 87 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு அக்., 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட முக்கிய தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தினர்.
தாக்குதல்
இந்த சம்பவத்தால் அங்குள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின.இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 87 பேர் கொல்லப்பட்டனர்.இதுதவிர, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.