48 மணிநேரம் கெடு.. காசாவை சுற்றிவளைக்கும் இஸ்ரேல் ராணுவம் - சுடுகாடாய் மாறிய நகரம்!
இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றிவளைத்ததாக தகவல் தெரிவித்துள்ளது.
போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காசா மீதான தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. அதில் இஸ்ரேல், பொதுமக்கள் தஞ்சமடைந்து இருக்கும் இடங்களிலும் குண்டுகளை வீசி வருவதால், பலி எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.
இடைவிடாது தாக்குதல் நடத்துவதால் அங்கு மீண்டும் தொலைத்தொட்ர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் 3வது முறையாக இவ்வாறு தொலைத்தொடர்பு அங்கு முடக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைத்த ராணுவம்
இந்நிலையில், நேற்று காசாவில் உள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர், இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, "காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது.
நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம். இன்னும் 48 மணி நேரம் தான் காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.