Thursday, Jul 10, 2025

கூடுதலாக ஒரு முட்டை கேட்ட கணவன் - மனமுடைந்து மனைவி எடுத்த விபரீத முடிவு!

Karnataka India Death
By Jiyath a year ago
Report

முட்டைக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அடிக்கடி தகராறு 

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாதநாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அனில் குமார் - பூஜா. இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கூடுதலாக ஒரு முட்டை கேட்ட கணவன் - மனமுடைந்து மனைவி எடுத்த விபரீத முடிவு! | Ispute With Husband Over Eggs Woman Suicide

இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிடும்போது தனக்கு கூடுதலாக ஒரு முட்டை வேண்டும் என அனில் குமார் கேட்டுள்ளார். அதற்கு பூஜா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

செல்போனில் இருந்த வீடியோ - பெண்ணை மிரட்டிய 49 வயது காவலாளி - கொடூர சம்பவம்!

செல்போனில் இருந்த வீடியோ - பெண்ணை மிரட்டிய 49 வயது காவலாளி - கொடூர சம்பவம்!

மனைவி தற்கொலை 

அப்போது அனில்குமார் திட்டியதால் மனமுடைந்த பூஜா, வீட்டின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார், பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூடுதலாக ஒரு முட்டை கேட்ட கணவன் - மனமுடைந்து மனைவி எடுத்த விபரீத முடிவு! | Ispute With Husband Over Eggs Woman Suicide

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முட்டைக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.