சச்சின் போட்ட பால் - பறக்கவிட்ட சூர்யா...இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ..!
பிரபலங்கள் பங்கேற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியான இதில் சூர்யாவும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து பேட்டிங் செய்தார்கள்.
ISPL
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் IPL தொடரை போன்றே தற்போது இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ISPL) என்ற புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10 ஓவர்களை கொண்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரான இதில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ISPL தொடருக்கான அணிகளில் சென்னை அணியின் உரிமையை நடிகர் சூர்யா பெற்றார்.
சூர்யா - சச்சின்
அதேபோல் ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ராம் சரணும், ஸ்ரீநகர் கே வீரின் உரிமையை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மஜி மும்பை அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர்.
மார்ச் 6 முதல் மார்ச் 15 வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் பிரபலங்கள் பங்கேற்ற கண்காட்சி போட்டியில் சென்னை அணிக்காக சூர்யா மற்றும் ரெய்னா ஆகியோர் பேட்டிங் செய்த போது, மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் பந்துவீசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
What a Moment ❤️
— Ayyappan (@Ayyappan_1504) March 6, 2024
Sachin Bowling to Suriya ? pic.twitter.com/eVnM7oiHNE