பட்டப்பகலில் தெருவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிசிடிவி காட்சிகள்!

Viral Video Sexual harassment Pakistan Crime
By Sumathi Jul 19, 2022 08:30 PM GMT
Report

பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்றபோது, ஒரு நபர் திடீரென பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பாலியல் அத்துமீறல்

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பட்டப்பகலில் ஹிஜாப் அணிந்த பெண்ணிடம், ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் தெருவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிசிடிவி காட்சிகள்! | Islamabad Women Unsafe In Country Pakistan

அதில் பர்தா அணிந்த பெண் தெருவில் நடந்து செல்லும்போது, அவருக்கு பின்புறத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அவரை இறுக்கி அணைத்துக்கொண்டார். அந்த கயவரிடமிருந்து விடுபட அந்த பெண் மிகுந்த சிரமப்பட்டார்.

கேள்விக்குறியான பாதுகாப்பு

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிச் செல்வது பதிவாகியுள்ளது. பாலியல் ரீதியான தொந்தரவு அடிப்படையில் வெளியான அறிக்கையில்,

பாகிஸ்தானில் உள்ள 70 சதவீதத்துக்கு மேல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை குறையாமலேயே இருக்கிறது.

 சிசிடிவி காட்சிகள்

பெண்கள் உரிமைக்காக வேலைசெய்யும் வைட் ரிப்பன் பாகிஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த தகவலின் படி, 2004ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை 4,734 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் பாகிஸ்தான் அரசு, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு பாதுகாப்பு சட்டத்தை மேம்படுத்தியுள்ளது.