சிம்பு என்ன ஏமாத்துறாரு - மணிரத்னம் படத்தை உடனே நிறுத்துங்க - கொந்தளித்த தயாரிப்பாளர்

Kamal Haasan Silambarasan Mani Ratnam
By Karthick May 10, 2024 09:52 AM GMT
Report

நடிகர் சிம்பு கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "Thug Life" படத்தில் இணைந்துள்ளார்.

சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது STR 48 படம் உருவாகி வருகின்றது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

ishari ganesh wants to stop maniratnam film simbu

பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம், நடுவிலேயே தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் "Thug Life" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு.

இதற்கான அறிவிப்பு அண்மையில் தான் வெளியாகியது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வரும் நிலையில், தற்போது பெரும் நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது.

ishari ganesh wants to stop maniratnam film simbu

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அவருக்கு நடிகர் சிம்புவிற்கு வெந்து தணிந்து காடு படத்தில் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் நீடிக்கிறது.

 நடிக்கக்கூடாது 

கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக தன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இன்னும் அப்படத்தில் நடித்துக்கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில் ஐசரி கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.

16 வருஷமா சிம்பு'வ லவ் பண்றேன்..! ப்ரபோஸ் பண்ண பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கச்சி..!!

16 வருஷமா சிம்பு'வ லவ் பண்றேன்..! ப்ரபோஸ் பண்ண பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கச்சி..!!

தன்னுடைய நிறுவனத்தின் ஒப்பந்ததின் படி, கொரோனா குமார் படத்தில் நடித்துக்கொடுக்காமல், சிம்பு மணிரத்னத்தின் படத்தில் நடிக்கக்கூடாது என்றும் அப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

ishari ganesh wants to stop maniratnam film simbu

வழக்கில் கொரோனா குமார் படத்திற்காக சம்பளம் முன்பணமாக பெற்ற 4.5 கோடி ரூபாயையும் திரும்ப தராமல், படத்திற்கான நேரத்தையும் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என குற்றம் சட்டப்பட்டிருந்து.