இது பாண்டியாவுக்கு புதிதல்ல; அப்படியெல்லாம் கோரிக்கை வைக்க மாட்டார் - இஷான் கிஷன் பேட்டி!

Hardik Pandya Ishan Kishan IPL 2024
By Swetha Apr 13, 2024 03:30 PM GMT
Report

ஹர்திக் பாண்டியா பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷன் பேட்டி

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரசிகர் அதிகம் எதிர்பார்த்த மும்பை - சிஎஸ்கே அணிகளுக்கான போட்டி நாளை வான்கடேவில் நடைபெற உள்ளது.

இது பாண்டியாவுக்கு புதிதல்ல; அப்படியெல்லாம் கோரிக்கை வைக்க மாட்டார் - இஷான் கிஷன் பேட்டி! | Ishan Kishan Tells Its Not New For Hardik

இந்த சீசனில் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் நன்றாக விளையாடி வருகிறார்.இதுவரை 5 போட்டிகளில் இஷான் 161 ரன்களை விளாசியுள்ளார். இருப்பினும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கலால் எழுப்பப்படும் முழக்கமானது இன்னும் குறைந்தபாடு இல்லை.

ரோகித் சர்மா, விராட் கோலி என்று யார் கூறியும் கோஷம் நிற்கவில்லை. இது குறித்து பேசிய இஷான் கிஷன், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு சவால் என்றே மிகவும் பிடிக்கும். இதுபோன்ற சூழலில் ஏற்கனவே பாண்டியா இருந்துள்ளார். தற்போது மீண்டும் அதேபோன்ற சூழலை எதிர்கொண்டு வருகிறார்.

பாண்டியாவை நோகடித்த ரசிகர்கள்; ஆதரவாக ரோஹித் ஷர்மா செய்த செயல் - வைரலாகும் Video!

பாண்டியாவை நோகடித்த ரசிகர்கள்; ஆதரவாக ரோஹித் ஷர்மா செய்த செயல் - வைரலாகும் Video!

பாண்டியாவுக்கு புதிதல்ல

இதுபோன்ற விஷயங்களை ரசிகர்கள் நிறுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைப்பவர் அல்ல ஹர்திக் பாண்டியா. அவர் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பேட்டிங் மூலமாக தனது திறமையையும், தலைமை பண்பையும் நிரூபிப்பார். அப்போது இதே ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவார்கள்.

இது பாண்டியாவுக்கு புதிதல்ல; அப்படியெல்லாம் கோரிக்கை வைக்க மாட்டார் - இஷான் கிஷன் பேட்டி! | Ishan Kishan Tells Its Not New For Hardik

இந்த சீசனில் எனது பேட்டிங் அணுகுமுறையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். கடந்த காலங்களில் பவுலர்கள் சிறப்பாக செயல்படும் போது, கொஞ்சம் கூட அச்சமின்றி அட்டாக் செய்ய முயல்வேன்.

ஆனால் இப்போது டி20 கிரிக்கெட்டிலும் கொஞ்சம் அவகாசம் எடுத்து கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டுள்ளேன். அதற்கான மன உறுதியும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.