இஷான் கிஷன் அதிரடியால் இந்தியா அணி அசத்தல் வெற்றி
இஷான் கிஷன் ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி அபார வெற்றிபெற்றது. இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக ராய் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், தாகூர் 2 விக்கெட்டுகளையும் சாஹல், புவனேஸ்வர் குமார், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் விக்கெட் ஆன பிறகும் இந்திய அணி சிறப்பாக ஆடியது.
குறிப்பாக 20 ஓவர் போட்டியில் அறிமுக வீரரான இஷான் கிஷான் அறிமுக போட்டியிலேயே 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்.மறுமுனையில் இந்திய அணியின் கேப்டனும் அரை சதம் அடித்தார்.
இதனையடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil